ஹோம் /விருதுநகர் /

முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் துறை இருந்தும் இன்னமும் ரோட்ல நின்னு போராடுற நிலை எங்களுக்கு - விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் துறை இருந்தும் இன்னமும் ரோட்ல நின்னு போராடுற நிலை எங்களுக்கு - விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விருதுநகர்

விருதுநகர் - மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

Virudhunagar Today News | அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (31.10.2022) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் உரிமைகளுக்காக கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்தில் கிராம உதவியாளர் மற்றும் நியாயவிலை கடை விற்பனையாளர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

மேலும் கிராம உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் போது முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கான களம் இல்லை, ஆதலால் அதை உடனடியாக சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

மேலும் படிக்க:  கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

இதில் பேசிய மாற்றுதிறனாளி ஒருவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தும் தாங்கள் இன்னும் உரிமைகளுக்காக சாலையில் நின்று போராட வேண்டிய நிலை தான் உள்ளது என்றும் ஆட்சியர் அலுவலகம் உட்பட எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் ஒரு மாற்று திறனாளி சிரமம் இல்லாமல் சென்று வரும் நிலை இல்லை என்றும் கூறினார். மேலும் நாங்கள் வேண்டுவது எல்லாம் இந்த சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுமூகமாக வாழ்வதற்கான ஒரு சூழல் தான் என்றும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar