ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் தேவாலயத்தில் கிறிஸ்துவ மதத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா...

விருதுநகர் தேவாலயத்தில் கிறிஸ்துவ மதத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா...

X
விருதுநகர்

விருதுநகர்

Christians Celebrated Pongal | விருதுநகரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் புனித இன்னார் சியர் தேவாலயத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளை மக்கள் பொங்கல் திருவிழாவாக கொண்டாடி வரும் சுழலில் இந்தாண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்கள் மற்றும் கோவில்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

மதம் கடந்த திருவிழா :

மேலும் பொங்கல் தமிழரின் பாரம்பரிய திருவிழா. அதனாலேயே மதங்களை கடந்து அனைத்து மதப்பிரிவுகளை சேர்ந்த தமிழர்களும் அவரவர் வழியில் பொங்கல் வைத்து கொண்டாடும் வழக்கம் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள இன்னாசியர் தேவாரத்தில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன்படி இன்னாசியர் தேவாரத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில், தேவாரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பின்னர், கும்மி, கரகாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளும் கட்டுரை போட்டி, கோலப்போட்டி, உறியடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

First published:

Tags: Local News, Pongal 2023, Virudhunagar