முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் | கோவில் பிரச்சனை காரணமாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

விருதுநகர் | கோவில் பிரச்சனை காரணமாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் மக்கள்

Virudhunagar | கோவில் பிரச்சனை காரணமாக விருதுநகர் அருகே உள்ள கிராமத்தில் தீடீரென இரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அருகே உள்ள கிராமத்தில் கோவில் பிரச்சனை காரணமாக தீடீரென இரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பாலவநத்தம் கிராமம். இங்கு ஆயிரம் ஆண்டு பழமையான பத்திர காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இதை இராமநாதபுரம் சமஸ்தானம் பராமரித்து வரும் நிலையில் அனைத்து சமூதாய மக்களும் சென்று வழிபட்டு வந்தனர்.

இதே கோவிலை அந்த ஊரை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் தங்களுக்கு தான் இந்த கோவில் சொந்தம் என உரிமை கொண்டாடி வந்தனர். இதனால் கோவில் நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையேகோவில் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனை நிலவி வந்தது.

சர்ச்சைக்குரிய கோவில் 

இதில் பிரச்சனை காரணமாக பத்திரகாளி அம்மன் கோயில் கடந்த ஐந்து மாதங்களாக பூட்டப்படிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6 ம் தேதி அருப்புக்கோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

போராட்டத்தில் மக்கள்

இதில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், தீடீரென பொதுமக்கள் பாலவநத்தம் சாலையில் வாகனங்களை செல்லவிடாமல் மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் மறியல்கைவிடப்பட்டது.

கோவில் பிரச்சனை பாலவநத்தம் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar