முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மக்கள் இனி அரசின் சேவை தொடர்பான தகவல்களை செல்போனிலேயே பெற்றுக்கொள்ளலாம்!

விருதுநகர் மக்கள் இனி அரசின் சேவை தொடர்பான தகவல்களை செல்போனிலேயே பெற்றுக்கொள்ளலாம்!

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News : விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிந்து கொள்ள தனி வாட்சப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

தற்போது வாட்ஸ்அப் மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்து இருக்கும் நிலையிலும் அரசு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இன்றும் ஊடகங்கள் வாயிலாக தான் சென்றடைகின்றன.

தற்போது சமூக வலைதளங்களில் போலி செய்திகள் எளிதில் பரவி விடுகின்றன. இதனால் எது உண்மை தகவல் என்று தெரிந்து கொள்ள முடியாத சுழலே காணப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த வாட்ஸ்அப் சேவை அறிமுகம் செய்யபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் வாட்ஸ்அப் சேவையை எப்படி பெறலாம் என்பது பற்றி காண்போம்.

விரு தகவல் தொடர்பு சேவை :

இதற்கென 9488400438 என்ற எண்ணை அறிமுகம் செய்து அதற்கு விரு தகவல் தொடர்பு சேவை என பெயரிட்டுள்ளனர்.

இந்த எண்ணை மொபைலில் சேவ் செய்து ஹாய் என செய்தி அனுப்பினால் போதும் பின்னர் அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு அளித்து வரும் சேவைகளுக்கான லிங்குகளை நேரடியாக மொபைலில் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்... இந்த வாரம் புதுக்கோட்டை கொடும்பாளூர் சத்திரம்...

முதல் முயற்சி :

முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசு திட்டங்களை எளிதில் தெரிந்துகொள்ள எதுவாகவும், போலி வலைத்தளங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உதவியாகவும் உள்ளது என பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

மேலும் இனிவரும் காலங்களில் இந்த சேவையில் மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்த்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசின் திட்டங்களை எளிதில் வாட்ஸ்அப்பில் பெற 9488400438 என்ற எண்ணை சேவ் செய்து மெசேஜ் செய்யவும்.

First published:

Tags: Local News, Virudhunagar