முகப்பு /விருதுநகர் /

ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலம் எப்போது வரும்? - எதிர்பார்ப்பில் விருதுநகர் மக்கள்

ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலம் எப்போது வரும்? - எதிர்பார்ப்பில் விருதுநகர் மக்கள்

X
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Virudhunagar District News | விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலக கட்டிடம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளதால் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால், அப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலக கட்டிடம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளதால் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2009 ம் ஆண்டே இங்கு மக்கள் கடந்து செல்வதற்கென ஓர் பாலம் அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டு, அதன் பின்னர் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை இன்று வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே உள்ளது.

மேலும் படிக்க :  ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

ஆட்சியர் அலுவலகம் வருவோர் மட்டும் அல்லாது, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற வெளியூர் பேருந்துகளும் இங்கு தான் நிற்கின்றன என்பதால், அங்கு செல்ல வேண்டிய மக்களும் இங்கு வருவதால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நடந்த வண்ணம் உள்ளன.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பாலம் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலம் அமைப்பதற்கு மண் பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பொதுமக்கள் மத்தியில் பாலம் எப்போது வரும் என காத்திருக்கும் நிலை உள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar