ஹோம் /விருதுநகர் /

புலி ஆட்டம் ஆடிய விருதுநகர்காரங்க.. பரவசமூட்டும் விருதுநகரின் 150 ஆண்டுகால கலாச்சார விழா..

புலி ஆட்டம் ஆடிய விருதுநகர்காரங்க.. பரவசமூட்டும் விருதுநகரின் 150 ஆண்டுகால கலாச்சார விழா..

விருதுநகரின்

விருதுநகரின் 150 ஆண்டுகால கலாச்சார விழா..

Virudhunagar Puli Aattam | விருதுநகரில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று மகர நோன்பு திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் விருதுநகரை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று மகர நோன்பு திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் விருதுநகரை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

150 ஆண்டுகால கலாச்சார மகர நோன்பு திருவிழா:

நவராத்திரியின் இறுதி நாளான விஜய தசமியன்று நிறைய ஊர்களில் சூரன் வதை எனும் தசரா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் விருதுநகரில் சற்று மாறுதலாக மகர நோன்பு திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

மகர நோன்பு திருவிழா அன்று காலையில் விருதுநகர் சொக்கநாதர் கோயில் சொக்க நாத சுவாமி தேரில் எழுந்தருளி உலா வந்து கே.வி.எஸ் பள்ளி அருகில் உள்ள நந்தவனத்திற்கு செல்வார்.இங்கு மாலையில் மக்களை காக்க மக்களுக்கு துன்பம் தரும் தீய சக்திகளை அழிக்கும் நோக்கில் வானை நோக்கி அம்பு விடும் நிகழ்வு நடைபெறும்.

மேலும் படிக்க:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

இதில் விருதுநகரை சேர்ந்த அனைத்து சமூதாய மக்களும் தனிதனி குழுக்களாக சேர்ந்து குழுவில் ஒருவர் புலி வேடமிட்டு ஆட மற்றவர்கள் சிலம்பம் சுத்துதல், மான்கொம்பு சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு நகர்வலம் வந்து நேர்த்திகடன் செலுத்துவர்.

புலி ஆட்டம் ஆடிய விருதுநகர்காரங்க..

மேலும் படிக்க:  வால்பாறைக்கு சுற்றுலா போறீங்களா? உஷார்... வனத்துறை எச்சரிக்கை.!

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு அடுத்த படியாக விருதுநகரில் நடக்கும் மிகப்பெரிய திருவிழா என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

முன்னொரு காலத்தில் இது சுயம்வர திருவிழாவாக நடந்தது என்றும் இதில் கலந்து கொண்டு வீர தீர செயல்கள் செய்து தன்னை நிரூபித்த ஆண்மகனையே அக்கால மகளிர் விரும்பி மணம் முடித்ததாக கூறுவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

படைபலம்:

அசுரனை வதம் செய்யும் சாமிக்கு பக்க பலமாக படையில் சேர தான் இப்படி அணிவகுத்து செல்வதாகவும் சிலர் கூறுவர். காலமாற்றத்தால் நம் பாரம்பரிய கலைகள் மறைந்து வரும் நிலையில் விருதுநகர் மக்கள் இன்றும் இத்திருவிழா மூலம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்‌

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar