முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் புதிய பஸ் நிலையம் : மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்கலாம்!

விருதுநகர் புதிய பஸ் நிலையம் : மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்கலாம்!

X
விருதுநகர்

விருதுநகர் புதிய பேருந்து நிலையம்

புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இன்று வரை முப்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சாத்தூர் கோட்டாட்சியர் தரப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விருதுநகரில் விருதுநகர் சாத்தூர் சாலையில் கடந்த 1992ம் ஆண்டு திறக்கப்பட்ட, காமராஜர் பெயர் கொண்ட புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இன்று வரை முப்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

இதை செயல்படுத்த கோரி மக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வரை இது செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது மக்களை வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. இதன் விளைவு இன்று வரை மக்கள் அருகில் இருக்கும் மதுரைக்கு செல்ல கூட சிரமப்பட்டு வருகின்றனர்.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! 

பேருந்து நிலையம் இன்று செயல்பாட்டுக்கு வரும் நாளை செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், மக்கள் இன்று வரை பேருந்து நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

அதிகாரிகள் பேருந்து நிலையத்தை செயல்படுத்த அங்கு சென்று கள ஆய்வு செய்து வருவது அவ்வப்போது நடப்பதும் பின்பு அப்படியே அது நின்றுபோவதும் தொடர்ந்து வரும் சூழலில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழு மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளது.

top videos

    இறுதியாக இது தொடர்பாக பேசிய வருவாய் கோட்டாட்சியர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை எழுத்து மூலமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar