விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி ஓர் தொழில் நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிவகாசி நகரின் ஒவ்வொரு சின்னஞ்சிறு தெருக்களிலும் நிறைய கண்ணுக்கு தெரியாத தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.அதனால் தான் சிவகாசியை குட்டி ஜப்பான் என்கிறோம்.
பட்டாசு, அச்சு தொழில்களை தாண்டி இன்னும் சில சிறு குறு தொழில்கள் சிவகாசியின் குட்டி ஜப்பான் அந்தஸ்தை தூக்கி பிடிக்க உதவியாக உள்ளன என்பதை அறிந்தோர் சிலரே.
அந்த வகையில் அறியப்படாத தொழிலாக இருந்து கொண்டே சிவகாசியில் தயார் செய்யப்படும் பேப்பர் ப்ளேட்டுகள் தமிழகம் முழுவதும் சப்ளையாகி வருகின்றன.
பேப்பர் ப்ளேட் எல்லா ஊரிலும் தயாரிக்க முடியும் என்றாலும், இங்கு தான் பேப்பர் ப்ளேட்டுகள் செய்ய தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கின்றன என்கிறார் பேப்பர் ப்ளேட்டுகள் தயார் செய்து வரும் ஜெகன்நாத்.
தொடர்ந்து பேசிய அவர் தனது தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு இதை தொடங்கியதாகவும், தற்போது நானும் எனது சகோதரர்களும் இணைந்து இதை சுயதொழிலாக செய்து வருவதாக கூறினார்.
இதையும் படிங்க : தென்காசியில் நலிவடைந்து வரும் நெசவுத்தொழில்.. கவலையில் தொழிலாளர்கள்
தற்போது பேப்பர் ப்ளேட்டுகளோடு கேக் பெட்டிகள் தயாரித்து வருவதாக தெரிவித்தவர் அவற்றின் செயல்முறைகளை விளக்கினார். இந்த பேப்பர் ப்ளேட்டுகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேப்பர் ப்ளேட்டுகள் வாங்க விரும்புவோர் 85267 53537 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Virudhunagar