Home /virudhunagar /

விருதுநகர் கௌசிகா நதிக்கரையில் பாண்டியர் கால சிவாலயம் - வரலாற்று சிறப்புகள் தெரியுமா?

விருதுநகர் கௌசிகா நதிக்கரையில் பாண்டியர் கால சிவாலயம் - வரலாற்று சிறப்புகள் தெரியுமா?

விருதுநகர் சிவன் கோவில்

விருதுநகர் சிவன் கோவில்

விருதுநகரில் மன்னர் கால கோவில்கள் அதிகளவில் காணப்படுகின்றன ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நகரை விட்டு சற்று தொலைவில் அமைந்துள்ளது. தொலைவை காரணம் காட்டியே புகழ்பெற்ற தளங்களை பற்றி அறியாத மக்கள் பலர் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகரில் மன்னர் கால கோவில்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நகரை விட்டு சற்று தொலைவில் அமைந்துள்ளன. தொலைவை காரணம் காட்டியே புகழ்பெற்றத் தலங்களை பற்றி அறியாத மக்கள் பலர் உள்ளனர். நாம் நினைத்த போதெல்லாம் போய் தரிசிக்க நகரிலேயே மன்னர் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது.

    விருதுநகரில் மன்னர் காலத்து கோவிலா? அது எங்கே உள்ளது? என விருதுநகர் மக்களே யோசிப்பர். ஆத்து பாலத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் ஹாஜி பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள சொக்கநாத சுவாமி கோயில் தான் அது. அட அந்த கோவில் தானா அங்க நிறைய தடவை போயிருக்கேன். ஆனா இது தெரியாம போயிடுச்சே என விருதுநகர் மக்கள் நினைக்க வாய்ப்புண்டு.

    விருதுநகர் சிவன் கோவில்


    ஆலய வரலாறு:

    பிற்கால பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முதலில் இக்கோவிலை அல்லம்பட்டி பகுதியில் கட்டியுள்ளார். பின்பு இக்கோவில் இங்கே மாற்றப்பட்டது.

    கோவிலின் உள்பகுதி


    ஆலயத்தில் உள்ள செப்பு திருமேனிகளில் புதியது பழையது கலந்து உள்ளது. இதை வைத்தே இக்கோவில் ஓர் நூற்றாண்டில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என உறுதி செய்யலாம் .ஏற்கனவே ஓரிடத்தில் இருந்த கற்கள் மற்றும் தூண்களை கொண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    தெப்பக் குளம்


    வெளியே பழமையான தெப்பக்குளம் ஒன்றை காணலாம். ஒற்றை சிறிய கோபுரத்தை கொண்ட இக்கோவிலில் சிவன் மற்றும் மீனாட்சி மூலவராக உள்ளனர்.

    கோவிலின் உள்பகுதி


    வெளிப்புற பகுதியில் விநாயகர், முருகனுக்கு தனி தனி சன்னதிகளையும், 63 நாயன்மார்களையும்‌ காணலாம்.  இவை தவிர தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோரையும் காணலாம்.

    விஷேச நாட்கள்:

    ஒவ்வொரு தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. முதல் ஆடி அமாவாசை நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவை தவிர தினசரி ஐந்து கால பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி