ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் 50 தெரு நாய்களை அடித்து கொன்ற ஊராட்சி மன்றத் தலைவர்? - காவல்துறை வழக்குப் பதிவு

விருதுநகரில் 50 தெரு நாய்களை அடித்து கொன்ற ஊராட்சி மன்றத் தலைவர்? - காவல்துறை வழக்குப் பதிவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருதுநகரில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்களை வைத்து அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அருகே உள்ள ஒ.சங்கரலிங்காபுரம் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக சுமார் 50 தெருநாய்களை ஊராட்சி மன்ற தலைவர் ஆட்களை வைத்து அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

ஓ.சங்கரலிங்காபுரம் கிராமத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் வீதியில் நடமாடவே அச்சத்துடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமியிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முறைப்படி புகார் கொடுத்து நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்காமல்  ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் இருவரும் சேர்ந்து ஆட்களை வைத்து 50க்கும் மேற்பட்ட நாய்களை அடித்தே கொன்றதாக கூறப்படுகிறது.

நாய் தொல்லை அதிகரிப்பால் நாய்களை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆமத்தூர் போலீசார் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Tamil News, Virudhunagar