முகப்பு /விருதுநகர் /

"பனை ஏறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை" அனுபவத்தை பகிரும் பனைமர தொழிலாளி!

"பனை ஏறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை" அனுபவத்தை பகிரும் பனைமர தொழிலாளி!

X
பனை

பனை மர தொழிலாளி

Virudhunagar | பனை மர தொழிலில் ஈடுபவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விருதுநகர் பனை மர தொழிலாளி விளக்கமளிக்கிறார்.

  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழ்நாட்டின் மாநில மரம் எதுவென்று கேட்டால் கேட்டால், ஓங்கி உயர்ந்த பனை மரம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஓங்கி உயர்ந்த என்றவுடன் அதன் உயரம் என்னவாக இருக்கும் என்று சற்று தேடிப் பார்த்தால் சராசரியாக ஒரு பனைமரம் 30 முதல் 40 மீட்டர் வரை வளரக்கூடியது.

அப்படியென்றால் அந்த மரத்தின் உச்சிக்கு சென்று நுங்கையோ , பதனீரையோ இறக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. எப்படி தொழிற்சாலைகளில் திறன்மிக்க இயந்திரங்களை கையாள திறன் வாய்ந்த வல்லுநர் தேவையோ அது போல உயர்ந்த பனை மரத்தில் ஏற மரம் ஏறி பழகிய பனையேறி வேண்டும்.

நவீன காலத்தில் இளைஞர்கள் எல்லாம் வெவ்வேறு வேலைகளுக்கு சென்று வரும் நிலையில், பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

பனைமரம் ஏற என்ன தான் பல கண்டுபிடிப்புகள் வந்ததாலும் அதெல்லாம் சரி வராது தம்பி என்று இன்றும் பழைய உபகரணங்களை கொண்டு பனையேறி வருகிறார் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிங்கராஜா.

காலை ஏழு மணி இருக்கும் அந்த நேரத்தில் தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து பதனீர் இறக்கிய கையோடு நம்மிடம் வந்து பேச ஆரம்பித்தவர் பனைமரம் ஏறுவது பற்றி சொல்ல தொடங்கினார்.

தான் சிறுவயதிலே பனைமரம் ஏறி பழகிவிட்டதாகவும், தற்போது பனை மரம் ஏறுவதை மட்டுமே நம்பி தொழில் செய்து வருவதாக தெரிவித்தார். பனை மரத்தில் உள்ள கஷ்டம் என்னவென்றால் வெயில் மழை பார்க்காமல் பனையில் பதனீர் வரும் காலங்களில் தவறாமல் பதனீர் இறக்க வேண்டும், இல்லையெனில் பனை பாழாகிவிடும். அது மட்டுமல்ல முதல் முறையாக ஏறும் போது பனை கருக்கு எனப்படும் பனையில் உள்ள முட்கள் நம் உடலை பதம் பார்க்கும் அவசரத்தில் கை காலை அப்போது எடுத்துவிட்டால் உயிர் பிழைப்பது கூட கஷ்டம்.

இதையும் படிங்க | கிராம சபை கூட்டத்துக்கு இவ்வளவு அதிகாரங்கள் உள்ளதா..? கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

இப்படி ஒவ்வொரு நாளும் பனையேறி இறங்குவது என்பது மறுபிறவி தான் அதனால் தான் மகன்களை வேறு வேலைகளுக்கு அனுப்பிவிட்டேன் , அவர்களும் இதை விரும்பவில்லை என்று கூறி விட்டு மீண்டும் பனையேற சென்றுவிட்டார். ஒரு நாளைக்கு பனைமரம் ஏறி இறங்கினால் சொற்ப வருமானமே கிடைத்து வரும் நிலையில், இன்றும் பல பனைமர தொழிலாளர்கள் இவரை போன்று வறுமையின் பிடியில் இருந்தாலும், பனை மரத்தின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக வேறு தொழிலுக்கு செல்லாமல் பனை மரத்தோடே வாழ்வை ஓட்டி வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar