ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்தது... பாசிப்பருப்பு விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்தது... பாசிப்பருப்பு விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

Virudhunagar News | விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்தும், பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.100 விலை உயர்ந்து ரூ.9,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த வாரம் பாசிப்பருப்பு விலை உயர்ந்தும், பாமாயில் விலை குறைந்தும் காணப்படுகிறது.

விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு 3 ஆயிரம் ரூபாயாகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.5,610 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.90 விலை குறைந்து ரூ.1,530 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,400 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,100 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,800 ஆகவும், கொண்டைக்கடலை ரூ.300 விலை உயர்ந்து குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனை ஆனது. பொரிகடலை 50 கிலோ ரூ.3,950 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,280 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,520 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,450 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.950 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது.

காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உளுந்து 100 கிலோ மூடை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,800 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.100 விலை உயர்ந்து ரூ.9,700 ஆகவும், பாசிப்பயறு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9,500 வரையிலும் விற்பனையாகிறது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.9,500 முதல் ரூ.10,900 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Must Read : கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.200 விலை குறைந்து ரூ.4,700 முதல் ரூ.4,900 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar