ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்வு - இல்லத்தரசிகள் கவலை

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்வு - இல்லத்தரசிகள் கவலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Virudhunagar market | பிரபலமான விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1600க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த வாரம் பாமாயில், பாசிப் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

பிரபலமான விருதுநகர் மார்க்கெட்டில், வேர்க்கடலை பருப்பு 80 கிலோ 7 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,200 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,100 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. சீனி சர்க்கரை 100 கிலோ ரூ.3,840 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,800க்கும் விற்பனைசெய்யப்பட்டது.

பொரிகடலை 50 கிலோ ரூ.3,950 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,220 ஆகவும், 2ஆம் ரகம் ரூ.3,460 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,470 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.880 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.9,900 ஆகவும் விற்பனையானது.

காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.

இதேபோல, விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.300 விலை குறைந்து ரூ.10,500 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,400 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.9 ஆயிரம் ஆகவும், பாசிப்பயறு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9,500 வரையிலும் விற்பனையானது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.9,800 முதல் ரூ.11,000 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.4,900 முதல் ரூ.5,100 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனயானது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பாமாயில் 15 கிலோ ரூ.40 விலை உயர்ந்து ரூ.1,640 ஆகவும், கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.3 ஆயிரம் ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.5,445 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனைசெய்ப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Cooking Oil, Local News, Virudhunagar