ஹோம் /விருதுநகர் /

காணும் பொங்கல் ஏன் கொண்டாடுறோம்? விருதுநகர் மக்கள் அளித்த சுவாரஸ்ய பதில்கள்!

காணும் பொங்கல் ஏன் கொண்டாடுறோம்? விருதுநகர் மக்கள் அளித்த சுவாரஸ்ய பதில்கள்!

X
கானும்

கானும் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றி விருதுநகர் மக்களின் கருத்து 

virudhunagar kanum pongal celebration | விருதுநகர் மக்களிடையே காணும் பொங்கல் குறித்து கேட்ட போது பெரும்பாலான மக்கள் காணும் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றி தெரியாமலே கருத்து தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

காணும் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்ற கேள்விக்கு விருதுநகர் மக்கள் பலர் வெவ்வேறு விதமான பதில்களை கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மிக முக்கிய பண்டிகையாக விளங்கும் பொங்கல் திருவிழாவை , மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பிரிவுகளாக கொண்டாடி வரும் நிலையில், சிலருக்கு இந்த பண்டிகை கொண்டாடுவதன் நோக்கம் மறந்து போய் இன்று வெறும் கொண்டாட்டமாகவே இருந்து வருகிறது. அதில் இறுதியாக வரும் கானும் பொங்கல் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கும் நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் கூடுவதற்கு ஏற்ப கடற்கரை போன்ற இடங்கள் இருக்கும் காரணத்தால், கானும் பொங்கல் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், விருதுநகர் போன்ற இடங்களில் மக்கள் கூடுவதற்கு ஏற்ற ஒரு இடம் இல்லாத காரணத்தாலும் காணும் பொங்கல் கொண்டாடும் வழக்கம் குறைந்தே காணப்படுகிறது.

சொந்தங்கள் கூடும் விழா:

விருதுநகர் மக்களிடையே காணும் பொங்கல் குறித்து கேட்ட போது பெரும்பாலான மக்கள் காணும் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றி தெரியாமலே இருந்து வந்துள்ளதாகவே கருத்து தெரிவித்த நிலையில், ஒரு சிலர் சொந்த பந்தங்களை சந்தித்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு சிறியோர்கள் பெரியோர்களிடம் ஆசி பெறுவதற்காக கொண்டாடும் பண்டிகை என தெரிவித்தனர்.

குறைந்து வரும் பழக்கம்:

மாறி வரும் சுழலில் சொந்த பந்தங்களின் பழக்கங்களும் குறைந்து வரும் சுழலில், கானும் பொங்கல் கொண்டாடும் பழக்கமும் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் சொந்த பந்தங்களை சந்தித்தனர் குழந்தைகள் ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு யார் சொந்தம் யார் பந்தம் என்பது கூட தெரிவதில்லை. பெருநகரங்களை போல மக்கள் கூடுவதற்கு ஏற்ற இடவசதி இல்லாதது ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும் மாறி விட்ட வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.

First published:

Tags: Local News, Pongal festival, Virudhunagar