முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் இருந்து செல்லும் ஒரேயொரு தொலைதூர பேருந்து இதுதான்.. இதுல பயணம் போயிருக்கீங்களா?

விருதுநகரில் இருந்து செல்லும் ஒரேயொரு தொலைதூர பேருந்து இதுதான்.. இதுல பயணம் போயிருக்கீங்களா?

X
விருதுநகர்

விருதுநகர் - மேட்டுப்பாளையம் பேருந்து

Virudhunagar to Mettupalayam Bus | தினமும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8  மணிக்கு புறப்படும் இந்த பேருந்து மதுரை, கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Virudhunagar, India

தினமும் விருதுநகரில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு நேரடி பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு இந்த தகவல் தெரியாமல் இருப்பதால் பேருந்தில் கூட்டமின்றி காணப்படுவதாக கூறப்படுகிறது.

கல்வி, வியாபாரம், தொழில் அனைத்திலும் சிறந்து விளங்க கூடிய விருதுநகரில், மக்களின் நீண்ட நாள் குறையாக இருப்பது விருதுநகரில் இருந்து வெளியூர் செல்ல நேரடி தொலைதூர பேருந்து இல்லை என்பது தான். அருகில் இருக்கும் மதுரைக்கு செல்லக் கூட ஒரு நேரடி பேருந்து இல்லை என்பது தான் விருதுநகர் மக்களின் நீண்ட நாள் கவலை. ஆனால் விருதுநகரில் இருந்து தினசரி ஒரு தொலைதூர பேருந்து இயக்கப்படுகிறது. அதுவும் தினசரி.

தினமும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 8  மணிக்கு புறப்படும் இந்த பேருந்து மதுரை, கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியுள்ள விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ஒரேயொரு பேருந்து இதுமட்டும்தான். அந்த வகையில், விருதுநகரில் நேரடியாக தொலைதூரத்திற்கு இயக்கப்படும் ஒரேயொரு பேருந்தாகவும் உள்ளது இந்த விருதுநகர் - மேட்டுப்பாளையம் பேருந்து.

விருதுநகர் - மேட்டுப்பாளையம் பேருந்து.

தினசரி இந்த பேருந்து இயக்கப்பட்டாலும் இது பற்றி அறிந்த சிலரே இங்கு வந்து பஸ் ஏறுகின்றனர். பெரும்பாலான மக்கள் விருதுநகரில் இருந்து எந்த தொலைதூர பேருந்தும் இல்லை என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றனர் என்கிறார் புதிய பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள ஈஸ்வரன்.

மேலும் படிக்க :  ஊட்டியில் ஒரே நாளில் சுற்றிப்பார்க்க இத்தனை இடங்களா?

இப்போது இந்த ஒரு பேருந்து தான் தொலைதூர பேருந்தாக இயக்கப்பட்டு வருவதாகவும், முன்பு சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களுக்கும் இங்கிருந்து நேரடி பேருந்து இயக்கப்பட்டதாகவும்,காலப்போக்கில் அவையெல்லாம் நிறுத்தப்பட்டு இன்று இந்த ஒரு பேருந்து தான் வந்து செல்கிறது , இது தான் ஒரு மாவட்ட தலைநகரின் நிலை என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் விருதுநகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து தற்போது, சிவகாசிக்கு மாற்றம் செய்யப்பட்டு விருதுநகர் மக்கள் சென்னை செல்ல ஆன்லைனில் புக் செய்தால் அப்போது மட்டும் அந்த பேருந்து, பேருந்து நிலையத்திற்குஉள்ளே வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக கூறப்படுகிறது.

    First published:

    Tags: Local News, Mettupalayam, Virudhunagar