ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வருகிறது 'ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடெக்ட்' அங்காடி - என்ன விற்பனை தெரியுமா?

விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வருகிறது 'ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடெக்ட்' அங்காடி - என்ன விற்பனை தெரியுமா?

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar News | தென் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமாக உள்ள விருதுநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்காடியின் மூலம் விருதுநகர் கார சேவை மேலும் பிரபல படுத்த முடியும் என்கின்றனர் ரயில்வே துறையினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அங்காடி வரவுள்ளது.

மத்திய அரசு 2022- 23ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதன் மூலம் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அந்தந்த பிராந்தியத்தில் புகழ்பெற்ற பொருட்களை காட்சிபடுத்துவதன் மூலம் அந்த பொருட்களின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதோடு, உள்ளூர் வர்த்தகத்தையும் மேம்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக ரயில்வே துறையால் உள்ளூர் பொருட்களின் விற்பனை ஊக்குவிப்பதற்காக, ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடெக்ட்) என்ற பெயரில் முக்கிய இரயில் நிலையங்களில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளில் புகழ்பெற்ற பொருட்களை விற்பனை செய்யும் வகையில் ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடெக்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழும் பாலவநத்தம்.. விருதுநகரில் இப்படி ஒரு கிராமமா!

இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்காடிகளில் உள்ளூர் வியாபாரிகள் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனைப்பொருட்களும், மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலையும், தஞ்சாவூரில் தலையாட்டி பொம்மைகளும் அந்தந்த நிலையங்களில் உள்ள பிரத்யேக அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது விருதுநகர் ரயில் நிலையத்திலும் அங்காடி அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

விருதுநகர் காரசேவு :

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் தயாரிக்கப்படும் கார சேவு உலக புகழ் பெற்றது. உள்ளூர் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில் விருதுநகர் கார சேவை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அங்காடி திறப்பு விழா காண காத்திருக்கும் நிலையில், இதன் அருகிலேயே கார சேவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தென் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமாக உள்ள விருதுநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்காடியின் மூலம் விருதுநகர் கார சேவை மேலும் பிரபலபடுத்த முடியும் என்கின்றனர் ரயில்வே துறையினர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar