ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

விருதுநகரில் அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் 4,128 ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலம், அரும்பு, மொட்டு மற்றும் மலர் என்று மூன்று படிநிலைகளில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டிற்குள் 8 வயதுள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்ற இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் போட்டப்பட்ட லாக்டவுன் காரணமான, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது. எனவே, இதனை களைந்திடும் நோக்கில், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதிக்கு சென்றது

இதில் அரும்பு என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். மலர் என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்

இந்நிலையில், விருதுநகரில் உள்ள வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், விருதுநகரில் தொடக்க நிலையில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்த மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை அவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 4,128 பேருக்கு பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar