ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் வரும் 15ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - முன்னெச்சரிக்கையா இருங்க!

விருதுநகரில் வரும் 15ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - முன்னெச்சரிக்கையா இருங்க!

விருதுநகரில் மின்தடை

விருதுநகரில் மின்தடை

Virudhunagar District News |விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள மின்நிலையங்களில் செவ்வாய் கிழமை (நவம்பர் 15) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள மின்நிலையங்களில், செவ்வாய் கிழமை (நவம்பர் 15) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள மின்நிலையங்களில், துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் வரும் 15ம் தேதி மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 15ம் தேதி மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..! - 'மழை லீவ் கேட்டவருக்கு விருதுநகர் ஆட்சியரின் நச் பதில்

இதனால், 15ம் தேதி பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரும் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர், செங்குளம், குட்ட தட்டி, காதிபோர்டு காலனி, மம்சாபுரம், காந்தி நகர், செண்பகத்தோப்பு, படிக்காசு வைத்தான்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Power Shutdown, Virudhunagar