ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Virudhunagar Power cut | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

ராஜபாளையம் கோட்டம் ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்: குடிநீர் வடிகால் வாரியம், உப்பு பட்டி, சீனிவாசன் பேப்பர் மில், ஹரி வெங்கடேஸ்வரர் பேப்பர் மில், முரளி கிருஷ்ணா மில், சாய் டெக்ஸ்டைல்ஸ், ஜெய ஆனந்த் பயர் ஒர்க்ஸ் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என மின் வாரிய செயற் பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar