ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நாளை மின் தடை ஏற்படும்  இடங்கள் தெரியுமா? 

விருதுநகரில் நாளை மின் தடை ஏற்படும்  இடங்கள் தெரியுமா? 

மின் தடை

மின் தடை

Virudhunagar Powe Cut Areas | விருதுநகர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை - நவம்பர் 9) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar | Virudhunagar

  விருதுநகர்  நகர் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் புதன் கிழமை (நவம்பர் 9) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  விருதுநகர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, நாளை (நவம்பர் 9)  மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

  மேலும் படிக்க: திருச்சி NIT-ல் வேலை வாய்ப்பு - தகுதி, விண்ணப்பிக்கும் முறை

  இதனால், நாளை (நவம்பர் 9)  பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  விருதுநகர் அகமது நகர், பரங்கிரிநாதபுரம், ஆயம்மாள் நகர், பாலாஜி நகர், இந்திரா நகர் கிழக்கு மற்றும் மேற்கு பாண்டியன் காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், பராசக்தி நகர், உழவர் சந்தை, ஏ.டி.பி. காம்பவுண்ட், நேருஜி நகர், பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய நிர்வாக இன்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

  Published by:Arun
  First published:

  Tags: Local News, Virudhunagar