ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட மக்கள் மழை பாதிப்பு குறித்த அவரச உதவிகளுக்கு இந்த எண்ணில் அழைக்கலாம்...

விருதுநகர் மாவட்ட மக்கள் மழை பாதிப்பு குறித்த அவரச உதவிகளுக்கு இந்த எண்ணில் அழைக்கலாம்...

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்பு குறித்து அவசர உதவிகளுக்கும் மீட்பு நடவடிக்கைளுக்கும் புதிதாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பருவ மழை பாதிப்பு குறித்து அவசர உதவிகளுக்கும் மீட்பு நடவடிக்கைளுக்கும் புதிதாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டால், கீழ் எண்ணில் தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவ மழை தொடகியுள்ள நிலையில், மழை பெய்து வருகிறது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளன.  இந்நிலையில், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

வடகிழக்கு பருவ மழையால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம் என்றும், தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம் என்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, North east monsoon rain, Rain, Virudhunagar