Home /virudhunagar /

100 நாள் வேலை திட்டத்தில் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு.!

100 நாள் வேலை திட்டத்தில் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு.!

மாதிரி படம்

மாதிரி படம்

Virudhunagar | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 100 நாள் வேலை  திட்டத்தில், உள்ள குறைகள் குறித்து, விசாரிக்கவும் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது  தொடர்பாக மெயில் ஐடியும், செல்போன் எண்களும் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில், உள்ள குறைகள் குறித்து, விசாரிக்கவும் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக மெயில் ஐடியும், செல்போன் எண்களும் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, குறை தீர்ப்பு அதிகாரியாக பெரியசாமி என்பவர் கடந்த 25.8.2022 முதல் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுப்பார். பிரச்சினைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்துவார்.

Also Read : விருதுநகர் மக்கள் விரும்பி உண்ணும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த தேங்காய் பூ

பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களது புகார் மனுக்களை குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் ombudsperson.vin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி பெற்ற பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தின் குறை தீர்ப்பு அதிகாரியான பெரியசாமி என்பவரை 9443177406 மற்றும் 6369876887 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி