ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு- உங்கள் பகுதி இருக்கானு தெரிஞ்சுக்கோங்க

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு- உங்கள் பகுதி இருக்கானு தெரிஞ்சுக்கோங்க

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Virudhunagar power cut Areas | விருதுநகர் மாவட்டம் சூலக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (நவம்பர் 5) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூலக்கரை துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, கூரைக்குண்டு, மாத்தி நாயக்கம்பட்டி ரோடு, குல்லூர் சந்தை மற்றும் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar