ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நாளை மின் தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நாளை மின் தடை அறிவிப்பு

விருதுநகரில் மின்தடை அறிவிப்பு

விருதுநகரில் மின்தடை அறிவிப்பு

Virudhunagar Power Cut | விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர்.ரெட்டியப்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) அக்டோபர் 27 ஆம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar