Home /virudhunagar /

ராஜபாளையத்தில் 17-ம் தேதி முழு கடையடைப்பு அறிவிப்பு

ராஜபாளையத்தில் 17-ம் தேதி முழு கடையடைப்பு அறிவிப்பு

ராஜபாளையத்தில்  முழு கடையடைப்பு  அறிவிப்பு

ராஜபாளையத்தில் முழு கடையடைப்பு அறிவிப்பு

RAJAPALAYAM: ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில், 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajapalayam, India
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில், 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.

நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடனும், சரியான திட்டமிடுதலும் இன்றி நடந்து வருகிறது. மக்களும் இதனால் அவதியடைந்து வருகின்றனர்.  இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதையும் படிங்க : விருதுநகருக்கு வருகிறது புதிய மார்கெட் - குழப்பம், அச்சத்தில் வியாபாரிகள்.. காரணம் என்ன?


எனவே நகரில் சாலைகளை சீரமை க்க கோரியும், திட்டப்பணிகளை துரி தமாக முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்ய ப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Rajapalayam Constituency, Virudhunagar

அடுத்த செய்தி