ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்படாத குடிநீர் இயந்திரம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்படாத குடிநீர் இயந்திரம்

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar Bus Stand : விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட தண்ணீர் வழங்கும் இயந்திரம் செய்யப்படாமல் நீண்ட நாட்கள் பூட்டிய படியே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது விருதுநகர் பழைய பேருந்து நிலையம். ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் செயல்படாத நிலையில் இங்கிருந்து தான் புறநகர் பேருந்துகள் மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது புதிதாக நவீன குளிரூட்டப்பட்ட தண்ணீர் வழங்கும் மையமும் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டு வந்த தண்ணீர் வழங்கும் மையம் சில நாட்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சில மாதங்களாக செயல்படாமல் பூட்டியபடியே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பயணிகளின் தண்ணீர் தேவைக்கா நகராட்சி சார்பில் வெளியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, வெளியில் தண்ணீர் விலைக்கு வாங்கி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. தண்ணீருக்கு தற்காலிக ஏற்பாடு செய்து இருந்தாலும், பல லட்சம் செலவில் கட்டப்பட்ட தண்ணீர் வழங்கும் மையம் வீணாகி வருவதால் அதனை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar