முகப்பு /விருதுநகர் /

மருத்துவத்துறையில் கால்பதிக்க உதவும் உயிரியல் அல்லாத படிப்புகள்.. விருதுநகர் பேராசிரியர் சொன்ன சூப்பர் ஐடியா!

மருத்துவத்துறையில் கால்பதிக்க உதவும் உயிரியல் அல்லாத படிப்புகள்.. விருதுநகர் பேராசிரியர் சொன்ன சூப்பர் ஐடியா!

X
மருத்துவத்துறையில்

மருத்துவத்துறையில் கால்பதிக்க உதவும் உயிரியல் அல்லாத படிப்புகள்

Medical Field | உயிரியல் அல்லாத பல படிப்புகளைப் படிப்பதன் மூலம் மருத்துவத்துறையில் நல்ல பணிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

மருத்துவம் படிப்பது என்பது பெரும்பாலோரின் கனவாக உள்ளது. வேலைவாய்ப்பில் சமரசமற்ற ஒரு துறையாக இருப்பதால் இன்றும் பல மாணவர்கள் மருத்துவராக இல்லை என்றாலும் பரவாயில்லை எதாவது ஒரு மருத்துவம் சார்ந்த படிப்பு படித்து விட்டு மருத்துவத் துறையில் நுழைந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் படித்து வருகின்றனர். ஆனால் சிலர் போதிய விழிப்புணர்வு இன்றி உயிரியல் அல்லாத ஒரு பாடப்பிரிவை எடுத்துவிட்டு பின்பு மருத்துவ துறைக்குள் வரும் வாய்ப்பு போய்விட்டதாக கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் சில மருத்துவப் படிப்புகளுக்கு உயிரியல் அல்லாத பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பேசிய விருதுநகரை சேர்ந்தவரும், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான மருத்துவர் ஜெயராஜ் சேகர், “ஒரு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் தவிர்த்து நிறைய வேலைகள் உள்ளன‌. அதில் சில பணிகளுக்கு செல்ல உயிரியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

மருத்துவமனை மேலாண்மை :

மேலும், அவர் கூறுகையில், “மருத்துவமனை மேலாண்மை என்பது மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இது சார்ந்த படிப்பில் சேர உயிரியல் அவசியம் இல்லை. மருத்துவமனையை நிர்வகிப்பது, மருந்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற இடங்களில் இவர்களின் செயல்பாடுகள் தான் அதிகம். மொத்த மருந்துவமனையே ஒரு நிர்வாக அலுவலரின் பொறுப்பில் தான் இருக்கும் என்பதாலே மருத்துவத் துறையில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

டேட்டா சயின்ஸ் :

தொடர்ந்து பேசிய அவர், “இதேபோன்று மற்றொரு முக்கியத் துறையாக உள்ளது டேட்டா சயின்ஸ். நோய் மற்றும் மருந்துகள் பற்றிய தரவுகளை சேகரிப்பது மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் இவர்களின் செயல்பாடுகள் தான் அதிகம். இதேபோல் சந்தையியல் மற்றும் மருத்துவச் சுற்றுலா போன்ற துறைகள் மருத்துவத்தில் வளர்ந்து வருகின்றன. அதை முழுமனதுடன் எடுத்து நன்றாக படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்றார்.

First published:

Tags: Local News, Virudhunagar