முகப்பு /விருதுநகர் /

தண்ணீர் இல்லை..! அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் அவல நிலை..

தண்ணீர் இல்லை..! அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் அவல நிலை..

X
குடிநீர்

குடிநீர் குழாய்கள்

Aruppukkottai Railway Station | அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து காணப்படுவதால் பயணிகள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் அருப்புக்கோட்டையிலிருந்து பாளையம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருப்புக்கோட்டை ரயில் நிலையம். கடந்த 1963ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த இரயில் நிலையம் மானாமதுரை விருதுநகர் ரயில் பாதையை இணைக்கும் ரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது. இடையில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்ட இந்த ரயில் நிலையம் கடந்த 2008ம் ஆண்டு மீண்டும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டது.

தற்போது இந்த ரயில் நிலையம் வழியாக மதுரை தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த பணி முடிவடைந்த பின்னர் ரயில் நிலையம் சந்திப்பாகதரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக 2 நடைமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மொத்த ரயில் நிலையத்திற்கும் ஒரேயொரு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதுவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதே ரயில் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதிய இரயில் பாதை அமைக்கும் பணி முடிவுற்ற பின்னர் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் முக்கியத்துவம் பெறும் என்பதை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் விரைந்து அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Southern Karnataka Lok Sabha Elections 2019, Villupuram