முகப்பு /விருதுநகர் /

இனி கேஸ் சிலிண்டர் விலை பற்றிய கவலை வேண்டாம்.. வீட்டில் இந்த சாதனம் இருந்தால் போதும்!

இனி கேஸ் சிலிண்டர் விலை பற்றிய கவலை வேண்டாம்.. வீட்டில் இந்த சாதனம் இருந்தால் போதும்!

X
பயோ

பயோ கேஸ் அடுப்பு

Bio Gas Plant | சாதாரண சமையல் எரிவாயுவற்கு மாற்றாக உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ கேஸ் அடுப்புகளை பயன்படுத்துவதன் மூலம் எரிவாயுக்கான செலவை குறைக்க முடியும் : முனியசாமி

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. முன்னாள் இராணுவ வீரரான இவர் தற்போது முதல் முறையாக ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எல்பிஜி கேஸ்க்கு மாற்றாக உணவுக்கழிவுகளில் இருந்து பயோ கேஸ் உருவாக்கும் தொட்டி தயாரித்து கொடுத்து வருகிறார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் உள்ள உணவுக்கழிவுகளை கொண்டே கேஸ் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் செலவை குறைப்பதோடு கழிவுகள் வெளியேற்த்தையும் கட்டுப்படுத்தலாம் என்கிறார் முனியசாமி.

ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி குப்பைகள் அணைத்தும் தன் இருப்பிடத்தில் அருகே கொட்டப்படுவதால் அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொண்டு அதற்காக எதாவது செய்ய வேண்டும் என இருந்த போது, கேரளா சென்ற போது அங்கு இந்த தொழில்நுட்பத்தை பார்த்ததாகவும் உடனே இதை நம் ஊரிலும் செய்யலாம் என்ற எண்ணம் வந்ததாக கூறியவர் தற்போது இதையே சிறிய தொழிலாக்கி வீடுகளில் இந்த பயோ கேஸ் அடுப்பை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார்.

வீட்டின் உணவு கழிவுகள் மக்கி அதில் உருவாக்கும் மீத்தேனை சமையல் எரிவாயுவாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளைக்கு 1.30 மணிநேரம் சமைக்கலாம் என்றவர். சாதாரணமாக ஒரு வீட்டிற்கு இந்த பயோ கேஸ் பொருத்த 21000 வரை செலவாகும், வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட இதை பொருத்தி பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.

பயோ கேஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 99528 21696 என்ற எண்ணில் முனியசாமியைதொடர்பு கொள்ளலாம்.

top videos
    First published:

    Tags: Gas Cylinder Price, Local News, LPG Cylinder, Virudhunagar