முகப்பு /விருதுநகர் /

அல்லம்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி.. நியூஸ்18 செய்தி எதிரொலியாக நடவடிக்கை..

அல்லம்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி.. நியூஸ்18 செய்தி எதிரொலியாக நடவடிக்கை..

X
சேதமடைந்த

சேதமடைந்த பழைய குடிநீர் தொட்டி

Virudhunagar News | 1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

நியூஸ் 18 செய்தி எதிரொலியாக பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அல்லம்பட்டியில் உள்ள பழைய சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை அகற்றி விட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அல்லம்பட்டி பகுதியில் காமராஜர் சிலை அருகே அமைந்துள்ளது 1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்தது. இதனால் இந்த தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக தற்போது கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில், “புதிய குடிநீர் தொட்டி அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் அதுவரை மக்கள் யாரும் பழைய தொட்டி அருகே செல்ல வேண்டாம்”என்று குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை ஒன்று தொட்டி அருகே வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய தொட்டி அமைவது உறுதியாகி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

First published: