முகப்பு /விருதுநகர் /

நியூஸ்18 செய்தி எதிரொலி... மீண்டும் பொலிவு பெற்ற ’ஐ லவ் விருதுநகர்’ செல்ஃபி பாயிண்ட் 

நியூஸ்18 செய்தி எதிரொலி... மீண்டும் பொலிவு பெற்ற ’ஐ லவ் விருதுநகர்’ செல்ஃபி பாயிண்ட் 

X
விருதுநகர்

விருதுநகர் செல்ஃபி பாயிண்ட்

Virudhunagar | நியூஸ்18 செய்தி எதிரொலியாக ஐ லவ் விருதுநகர் செல்ஃபி பாயிண்டில் உள்ள லைட்டுகள் சரி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது புத்தக திருவிழாவில் முதல் முறையாக ஐ லவ் விருதுநகர் என்ற செல்ஃபி பாயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில், புத்தக திருவிழாவின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் புத்தக திருவிழா முடிந்த பிறகு இந்த செல்ஃபி பாயிண்ட் விருதுநகர் நகராட்சி பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கும் மக்கள் திரளாக வந்து செல்ஃபி பாயிண்டை பார்த்து வந்தனர். இந்தநிலையில், செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டு ஒரு மாதத்திலேயே செல்ஃபி பாயிண்ட்டில் உள்ள லைட்டுகள் பழுதாகின. விருதுநகர் என்ற வார்த்தையில் உள்ள ’து’ மற்றும் ’ந’ என்ற எழுத்துக்கள் ஒளிராமல் காணப்பட்டன.

இதுதொடர்பாக நியூஸ்18 உள்ளூர் செய்திகள் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் செல்ஃபி பாயிண்டில் உள்ள பழுதடைந்த லைட்டுகள் மாற்றப்பட்டு தற்போது மீண்டும் ஐ லவ் விருதுநகர் செல்ஃபி பாயிண்ட் மின்னொளியில் ஒளிர தொடங்கியுள்ளது.

தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கம், சிலம்ப பயிற்சி! மாஸ் காட்டி வரும் விருதுநகர் தலைமையாசிரியர்!

இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் மக்கள் இங்கு வந்து புகைப்படங்கள் எடுக்க தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar