Home /virudhunagar /

விருதுநகருக்கு வருகிறது புதிய மார்கெட் - குழப்பம், அச்சத்தில் வியாபாரிகள்.. காரணம் என்ன?

விருதுநகருக்கு வருகிறது புதிய மார்கெட் - குழப்பம், அச்சத்தில் வியாபாரிகள்.. காரணம் என்ன?

விருதுநகர்

விருதுநகர் புதிய மார்க்கெட்

Virudhunagar New Vegetables Market | விருதுநகர் புதிய மார்கெட் அமைய உள்ள பகுதி தங்களின் வியாபாரத்திற்கு உதவாது என்ற கருத்து வியாபாரிகள் மத்தியில் நிலவி வருகிறது.விருதுநகரில் மெயின் பஜார் பகுதியில் தற்போதைய காய்கறி மார்க்கெட் செயல் பட்டு வருகிறது. இந்த பகுதி மிகவும் குறுகிய பகுதி என்பதால் அட?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் புதிய மார்கெட் அமைய உள்ள பகுதி தங்களின் வியாபாரத்திற்கு உதவாது என்ற கருத்து வியாபாரிகள் மத்தியில் நிலவி வருகிறது.

    விருதுநகரில் மெயின் பஜார் பகுதியில் தற்போதைய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி மிகவும் குறுகிய பகுதி என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்க முடிவு செய்து கடந்த மே மாதம் சட்டசபையில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தற்போது ஓராண்டு முடிவடைந்த நிலையில் புதிய மார்க்கெட் அமைக்க விருதுநகர் ராமமூர்த்தி சாலை அருகே உள்ள நகராட்சி இடத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விரைவில் அங்கு புதிய மார்கெட் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆச்சரியம் நிறைந்த சதுரகிரி மலை பயணம்..!

    இந்நிலையில் புதிய மார்கெட் அமைய உள்ள இடம் நகர் பகுதியை விட்டு சற்று தொலைவில் உள்ளதால் அங்கே மார்கெட் அமைத்தால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மேலும் சிலர் புதிய மார்கெட்டில் அதிக வாடகை கொடுத்து கடை எடுக்க முடியாது என கருத்து தெரிவிக்கின்றனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    புதிய மார்கெட் பற்றி வியாபாரிகள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டு விரைவில் புதிய மார்க்கெட் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி