ஹோம் /விருதுநகர் /

2022 தீபாவளிக்கு சிவகாசியில் அறிமுகமாகியுள்ள புதிய ரக பட்டாசுகள் என்னென்ன? விலை இவ்ளோதானா...!

2022 தீபாவளிக்கு சிவகாசியில் அறிமுகமாகியுள்ள புதிய ரக பட்டாசுகள் என்னென்ன? விலை இவ்ளோதானா...!

புதிய

புதிய ரக பட்டாசுகள்

Virudhunagar | தீபாவளி நெருங்கிவரும் நிலையில் பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தீபாவளி, அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனையாளர்கள் விற்பனையைத் தொடங்கி உள்ளனர். இந்தாண்டு புதிதாக வந்துள்ள பட்டாசுகள் பற்றியும் அதன் விலை நிலவரம் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

பட்டாசு தயார் செய்து வரும் சிவகாசி சென்றிருந்த போது,

சிவகாசியில் ஆறு ஆண்டுகளாக பட்டாசு தொழில் செய்து வரும் நிஷாந்த் புது பட்டாசுகள் பற்றியும் அதன் விலை பற்றியும் விவரித்தார். இந்தாண்டு தீபாவளிக்கு நிறைய புது ரக பட்டாசுகள் வந்துள்ளன. அவற்றுள் கவனிக்க தக்கது வாலா பட்டாசுகளுக்கு மாற்றாக வந்துள்ள பசுமை பட்டாசுகள்.

மேஜிக்கல் 1,000 வாலா:

1,000 வாலா பட்டாசுகள் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட காரணத்தால் அதற்கு மாற்றாக அதை போலவே செயல்திறன் கொண்ட பசுமை பட்டாசுகள் வகையை சேர்ந்த மேஜிக்கல் வாலா பட்டாசுகள் இந்தாண்டு வந்துள்ளன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் வெளியாகும் குப்பைகள் வாலா பட்டாசுகளை விட மிக குறைவு.

புதிய ரக பட்டாசுகள்

பட்டாசு டின்கள் :

கோக் , பெப்சி டின்களை போன்றே அதன் வடிவில் இரவு நேரத்தில் வெடிக்க கூடிய பட்டாசுகள் செய்யப்பட்டுள்ளன. இது காண்போரின் கவனம் பெறுகிறது. இதைப்போன்று நிறைய புதுப்புது பட்டாசுகள் இந்தாண்டு வந்துள்ளன.

புதிய ரக பட்டாசுகள்

பட்டாசுகள் விலையேற்றம்:

கடந்த ஆண்டை விட பட்டாசுகள் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் பேசுகையில், மூலப்பொருள் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை மற்றும் நீதிமன்ற கட்டுப்பாடு ஆகியவற்றால் விலை அதிகரித்துள்ளது, எனினும் இந்தாண்டு விற்பனை எப்பவும் போல உள்ளது. இதை போன்று எப்போதும் மக்கள் சிவகாசி பட்டாசுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்தார்.

75% தள்ளுபடியில் பட்டாசுகள் வாங்க:

kalyaan Crackers: தொடர்புக்கு: - 86675 65845

ஆன்லைனில் புக் செய்ய வெப்சைட் முகவரி: https://www.kalyaancrackers.com/

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar