ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மக்களின் கால் நூற்றாண்டு கால பிரச்னை - இதன் பின்னணி என்ன?

விருதுநகர் மக்களின் கால் நூற்றாண்டு கால பிரச்னை - இதன் பின்னணி என்ன?

விருதுநகர்

விருதுநகர் புதிய பேருந்து நிலையம்

Virudhunagar Bus Stand | விருதுநகரில் 30 ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களுக்காக இன்னமும் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயலற்று பயனற்ற நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள் பேருந்திற்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில்  புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரி பொதுமக்கள் தரப்பில் முறையிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.

விருதுநகர் - சாத்தூர் சாலையில் அமைந்துள்ளது இந்த புதிய பேருந்து நிலையம். 30 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகரில் இருந்து வெளியூர் பேருந்துகளை இயக்க முடிவு செய்து, அதற்கென ஒரு இடத்தை தேர்வு செய்து புதிய பேருந்து நிலையத்தை கட்டி முடித்து, 1992 ம் ஆண்டு மே 3 ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். பேருந்து நிலையம் திறக்கப்பட்ட முதல் ஆறு மாதங்கள்  நன்றாகவே செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது புதிய பேருந்து நிலையமானது, பேருந்துகளின் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க:  சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

என்ன காரணம்? :

புதிய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி முடங்கி கிடப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது , சில வியாபார அமைப்புக்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக புதிய பேருந்து நிலையத்திற்கு பதிலாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் தற்போது சாலைகளிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. நெல்லை, நாகர்கோவில் பேருந்துகள் நெடுஞ்சாலையில் சென்றுவிடுகின்றன. அவர்களுக்கு எப்போதும் விருதுநகர் நிறுத்தம் என்றால் அது ஆட்சியர் அலுவலகம் தான். மேலும் சில பேருந்துகள் கடமைக்கு பேருந்து நிலையம் உள்ளே சென்று ஒரு ரவுண்டு வருகின்றன. இப்படி புதிய பேருந்து நிலையம் முழுவதும் முடக்கப்பட்டதில் முழுக்க முழுக்க அரசியல் நிறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:  திருமண தடை நீங்க விருதுநகரில் வழிபடவேண்டிய முக்கிய கோவில்

தற்சமயம் பேருந்து நிலையம் கட்டி 30 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் பேருந்து நிலையம் சேதமடைந்து வருகிறது.

கால் நூற்றாண்டுக்கு மேலாக நிலவி வரும் இந்த பிரச்சனையில் மாவட்டத்திற்கு புதியதாக வரும் ஆட்சியர்கள் அவ்வப்போது சில ஆணைகள் பிறப்பிப்பதும் பின்னர் பேருந்துகள் உள்ளே வருவதும் பின்னர் அந்த கலெக்டர் மாற்றப்பட்ட பின்னர் பேருந்துகள் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடுவதும் தொடர்கதையாகி உள்ளது. இதனாலயே வரும் ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படி நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைக்கு எந்த அரசாங்கமும் தீர்வு காண முன்வரவில்லை. மக்கள் வரிப்பணம் முற்றிலும் வீணடிகப்பட்டுள்ள நிலையில், இனியாவது புதிய பேருந்து நிலையம் செயல்படுமா என்று பஸ் ஸ்டாண்டை விருதுநகர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar