ஹோம் /விருதுநகர் /

தேசிய திறனறி தேர்விற்கான கருத்தரங்கம்.. விருதுநகர் அரசு பள்ளியில் நடைபெற்றது..

தேசிய திறனறி தேர்விற்கான கருத்தரங்கம்.. விருதுநகர் அரசு பள்ளியில் நடைபெற்றது..

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News : விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனறித் தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்த புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனறி தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்த புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ANT அறக்கட்டளை கடந்த ஆண்டுகளில் தேசிய திறனறி தேர்விற்காக சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் கையேடுகள் வழங்கி அவர்களை தயார்படுத்தி வருகிறது.

தேசிய திறனாய்வுத் தேர்வு(National Talent Search Examination - NTSE) என்பது 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வு ஆகும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் கிடைக்கும்.

அம்மாணவனுக்கு முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) வரைக்கும் வரை இந்த உதவித்தொகை உண்டு. இத்தேர்வினில் அரசு மாணவர்கள் தேர்ச்சி பெற சரியான வழிகாட்டுதலும், தொடர் பயிற்சியும், அதற்கான பயிற்சி புத்தகங்களும் தேவை.

இதையும் படிங்க : விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

இதனால் ஏஎன்டி அமைப்பினர் தேசிய திறனறி தேர்விற்க்கு இந்த வருடம் தேசிய திறனறி தேர்விற்கு தயாராகவுள்ள பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் விதமாக ஏ.என்.டி அறக்கட்டளையின் தலைவர் தி.ஜெயராஜசேகரால் தயாரிக்கப்பட்ட 810 பக்கங்களை கொண்ட திறனறி தேர்வு பயிற்சி புத்தகங்களை மாணவ மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 30/11/2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற திறனறித் தேர்விற்க்கு தயாராகும் விதம் என்ற கருத்தரங்கினில் இப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை S.சர்மிளா, சிவகாசி ஷடோ பவுன்டேசன் நிறுவனர் S.K.B..குமேரசன் மற்றும் ANT அறக்கட்டளையின் பொருளாளர் தி.திருவேங்கடராமானுஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தி.ஜெயராஜசேகர் 'திறனறித் தேர்விற்க்கு தயாராகும் விதம்' என்ற தலைப்பில் உரையாற்றி என்.டி.எஸ்.இ பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.

பேரா. தி.ஜெயராஜசேகர் அவர்தம் கருத்தரங்கு உரையில் தேசிய திறனாய்வுத் தேர்வு 'மன திறன் சோதனை (Mental Ability Test - MAT)' மற்றும் 'பள்ளிக் கல்விக்குரிய இயல்நாட்டத் தேர்வு (Scholastic Aptitude Test - SAT)' என்ற இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும் எனவும் ஒவ்வொரு வினாத்தாளும் நூறு மதிப்பெண்களுக்கு தெரிவு விடை வினாக்கள் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

ஏ.என்.டி அறக்கட்டளை என்.டி.எஸ்.இ தேர்விற்க்கு அரசு பள்ளி மாணவ மாணவிகள் அவர்களை தயார்படுத்திக் கொள்ள புத்தகங்கள் வழங்குவதன் மூலம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பிற தனியார் பள்ளி மாணவ மாணவிகளைப் போல் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது எனவும் மிக முக்கியமாக, அவர்களுக்கு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், விரும்பியதை உணரவும், அவர்களின் எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கவும், கனவு நிறைவேறவும் அவர்களுக்கு ANT அறக்கட்டளை துணையாக இருக்குமென நம்புவதாகவும் கூறினார்.

இக்கருத்தரங்கினில் வேறுபட்டதைக் காண், திசை உணர்வு, சின்னங்கள் மற்றும் குறியீடுகள், இரத்த உறவுகள், கடிகாரங்கள் மற்றும் நாட்காட்டிகள், வெண் வரைபடங்கள் மற்றும் பகுப்பாய்வு புதிர்கள் போன்ற மன திறன் சோதனை தேர்விற்க்கான பாடங்கள் டாக்டர்.தி.ஜெயராஜசேகர் அவர்களால் மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டது. இயல்நாட்டுத் தேர்விற்க்குரிய கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளாதாரத்திற்கான பாடங்களையும் மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உடன் ANT அறக்கட்டளையின் செயலாளர் பாண்டிச்செல்வி, ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் இக்கருத்தரங்கினில் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Virudhunagar