Home /virudhunagar /

பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டில் வெற்றி வாகை சூடிய குடும்பத்தலைவியின் காளை - குவியும் பாராட்டு

பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டில் வெற்றி வாகை சூடிய குடும்பத்தலைவியின் காளை - குவியும் பாராட்டு

பள்ளப்பட்டி

பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு

Virudhunagar Jallikattu: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு வெகு விமர்சியாக நடைபெற்றது. போட்டியில் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் வீரத்தமிழச்சி காளை வெற்றிபெற்று வாகை சூடியுள்ளது. வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் ஸ்ரீஅய்யனார்,ஸ்ரீஅரியசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஜல்லிக்கட்டு போட்டியை, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணக்குமார் தொடங்கி வைத்தார்.இதனையடுத்து போட்டியில் முதல் காளையாக கோயில்காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 357 காளைகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 350 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    மாடுபிடி வீரர்கள்


    மேலும் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும்,பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில்,குத்துவிளக்கு மற்றும் ரொக்கப் பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பம்சமாக விருதுநகர் மாவட்டம் நத்த குளம் அருகே உள்ள குழலிகுளம் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவியான செங்கொடியின் காலை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை ஆண்கள் மட்டுமே காளைகளை வாடி வாசலுக்கு கொண்டு அவிழ்த்து விடும் நிலையில் ஜெயக்கொடி தனது காதலை வாடிவாசலில் அவிழ்த்து விட்டார். போட்டியிலும் சீறிப்பாய்ந்த காலை மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றிபெற்றது. ஜல்லிக்கட்டு காளைகள் உரிமையாளர் ரே குடிக்கு கட்டில் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மாடுபிடி வீரர்கள்


    இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் ஜெயக்கொடி கூறியதாவது, எனது காளையின் பெயர் ராமு. எங்கள் வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்த்து வருகிறேன். நான் மற்றும் எனது குடும்பத்தினருடன் மிகவும் அன்பாக பழகக் கூடிய ராமு. பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்னது மாட்டிற்கு சத்தான தீவனங்கள் கோதுமை தவிடு புண்ணாக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வழங்கி வருகிறேன். ஆண்கள் மட்டுமே வாடி வாசலில் வந்து காளைகளை அவிழ்த்து விடும் நிலையில் நான் வளர்த்த காளை ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.இதில் மதுரையை சேர்ந்த ஒருவரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளுர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கண்டு ரசித்தனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Jallikattu, Virudhunagar

    அடுத்த செய்தி