Home /virudhunagar /

நல்லதங்காள் பிறந்த விருதுநகர் அர்ஜூனாபுரம் கிராம கோவிலுக்கு ஒரு பயணம்.. இந்த கிணற்றில் தான் தற்கொலை செய்தாரா?

நல்லதங்காள் பிறந்த விருதுநகர் அர்ஜூனாபுரம் கிராம கோவிலுக்கு ஒரு பயணம்.. இந்த கிணற்றில் தான் தற்கொலை செய்தாரா?

விருதுநகர்:

விருதுநகர்: அர்ஜூனாபுரம் நல்லதங்காள் கோவில்..

Virudhunagar Nallathangal Temple | விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ஜூனாபுரம் கிராமத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான, நல்லதங்காள் - நல்லதம்பி  சிறுவயது முதலே   ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்திருந்தனர். நல்லதங்காள் வறுமை காரணமாக தனது 7 குழந்தைகளுடன், தானும் தற்கொலை செய்து கொண்ட கிணறு அருகே அவருக்காக கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில்  அண்ணன் தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த நல்லதங்காள் - நல்லதம்பி ஆகியோருக்கு கட்டப்பட்டுள்ள கோவில் குறித்தும், நல்லதங்காள் தனது 7 குழந்தைகளுடன் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கிணறு குறித்தும் இத்தொகுப்பில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

நல்லதங்காள் கதை:

அர்ஜூனாபுரம் கிராமத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான, நல்லதங்காள் - நல்லதம்பி  சிறுவயது முதலே   ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்திருந்தனர். இப்படியான சூழலில் தங்கை நல்லதங்காளை அண்ணன் நல்லதம்பி, மானாமதுரையை ஆட்சி செய்து வந்த காசிராஜனுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணம் ஆன சில ஆண்டுகளில் நல்லதங்காள் 7 குழந்தைகளுக்கு தாய் ஆகிறாள். இந்நிலையில் மானாமதுரையில் கடுமையான பஞ்சம் ஏற்படவே குழந்தைகளை கூட்டிக்கொண்டு அண்ணன் வீட்டிற்கு வருகிறாள் நல்லதங்காள். வந்த இடத்தில் அண்ணன் வேட்டைக்கு சென்றுவிடவே அண்ணி மூளி அலங்காரியோ இவர்களின் வருகையை விரும்பாமல் இவர்களுக்கு உணவு தராமல் கொடுமை செய்கிறாள்.

குழந்தைகளும் பசியால் துடிக்கவே நல்லதங்காள் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தங்கையின் மரணம் குறித்து கேட்டறிந்த அண்ணன் நல்லதம்பியும் இறந்து விடுகிறார்.

அர்ஜூனாபுரம் நல்லதங்காள் கோவில்..


நல்லதங்காள் இறந்த பின் அவள் பிறந்த ஊரான அர்ச்சுனாபுரம் மக்கள் அவளை தெய்வமாக வணங்க தொடங்கினர்.
இந்த அர்ச்சுனாபுரம் கிராமமானது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்த ஊரின் எல்லையில் நல்லதங்காளுக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

நல்லதங்காள் தற்கொலை செய்ததாக நம்பப்படும் கிணறு


கோவில் அமைப்பு:

பசுமையான சூழலில் உள்ள இந்த கோவிலில் உள்ளே நல்லதங்காள் சிலையும் வெளியே 7 குழந்தைகளின் சிலையும் உள்ளது.
இந்த குழந்தைகள் பசியோடு இறந்ததால் இங்கு வரும் பக்தர்கள் இவர்களுக்கு பொரியும் பிஸ்கட்டும் வாங்கி படைக்கின்றனர்.
கோவிலில் இருந்து சிறிது தொலைவு சென்றால் நல்லதங்காள் கிணற்றையும் காணலாம்

நல்லதங்காள் கோவிலில் அவரின் 7 குழந்தைகளுக்கான சிலைகள்


விஷேச நாட்கள்:

இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விஷேச பூஜைகள் நடைபெறும் அன்று வெளியூரில் இருந்து அதிகளவில் வந்து செல்வர்.

Nallathangal Temple
விருதுநகர்: அர்ஜூனாபுரம் நல்லதங்காள் கோவில்..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Nallathangal syndrome:

பொதுவாக இந்திய நீதிமன்றங்கள் சில வழக்குகளில் நல்லதங்காள் கதையை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளன.இதை தான் நல்லதங்காள் சின்ட்ரோம் என்கிறோம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி