முகப்பு /விருதுநகர் /

படுத்துக்கிட்டே தான் போகனும்.. சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் சித்தரின் குகை பற்றி தெரியுமா?

படுத்துக்கிட்டே தான் போகனும்.. சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் சித்தரின் குகை பற்றி தெரியுமா?

X
கோரக்கர்

கோரக்கர் சித்தர் குகை

Sadhuragiri Hills | சதுரகிரி மலையில் காணத்தக்க வகையில் பல இடங்கள் உள்ளன அவற்றுள் ஒன்று தான் கோரக்கர் சித்தர் வாழ்ந்ததாக நம்பப்படும் கோரக்கர் சித்தர் குகை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை பல அதிசயங்கள் நிறைந்த ஒரு பகுதியாக தான் மக்களால் பார்க்கப்படுகிறது. இங்குள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில் தவிர்த்து சதுரகிரி மலையில் காணத்தக்க வகையில் பல இடங்கள் உள்ளன அவற்றுள் ஒன்று தான் கோரக்கர் சித்தர் வாழ்ந்ததாக நம்பப்படும் கோரக்கர் சித்தர் குகை.

சித்தர்களின் பூமி, இன்றும் சித்தர்கள் வாழும் இடமாக கருதப்படும் சதுரகிரி மலையில், மலையேற்றத்தின் போது மாங்கனி ஓடை, சங்கலிப்பாறை, வழுக்கும் பாறை பகுதிகளை கடந்து செல்லும் போது , அடர்ந்த வனப்பகுதியின் பாதையை விட்டு ஒரு இருபது அடி கீழே சென்று பார்த்தால் அங்கு நீரோடைக்கு அருகே ஓர் குகை இருப்பதை காணலாம். இங்கு கோரக்கர் சித்தர் சிறிது காலம் தங்கி தவம் செய்தார் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் இந்த குகை கோரக்கர் குகை என பெயர் பெற்றது.

கோரக்கர் குகையின் முன்பு ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை தான் விருதுநகர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அர்ச்சுனா நதி. இங்கு நீரானது மூலிகை கலந்து வருவதால் இதில் குளித்தால் நோய் நீங்கும் மற்றும் இந்த நீரை மூன்று முறை எடுத்து பருகினால் முற்பிறவி பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று ஆன்மிகவாதிகள் நம்புகின்றனர்.

கோரக்கர் தவம் செய்ததன் நினைவாக குகையில் விளக்கேற்றி மக்கள் வழிபட்டு வருகின்றனர். குறுகிய இந்த குகைக்குள் ஒரு நபர் செல்ல வேண்டும் என்றால் படுத்தபடியே தான் செல்ல முடியும். இதில் கோர்க்க சித்தர் எப்படி தவம் செய்தார் என்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சதுரகிரி மலையேற வரும் பக்தர்கள் இங்கு வந்து சித்திரை வழிபட்டு சிறிது நேரம் தியானம் செய்து ஓய்வெடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சதுரகிரி மலையேற வரும்போது பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான ஒன்று இந்த கோரக்கர் குகை.ஆனால் பாதுகாப்பு முக்கியம்.நீரோடை இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். நீரோட்டம் அதிகமாக இருக்கும் காலத்தில் குகைக்கு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது.

First published:

Tags: Local News, Sathuragiri, Virudhunagar