ஹோம் /விருதுநகர் /

சிவகங்கை சீமையை ஆண்ட மருதுபாண்டியர்களின் பூர்வீக கிராமம்.. முக்குளத்துக்கு ஒரு விசிட்..

சிவகங்கை சீமையை ஆண்ட மருதுபாண்டியர்களின் பூர்வீக கிராமம்.. முக்குளத்துக்கு ஒரு விசிட்..

மருதுபாண்டியர்களின்

மருதுபாண்டியர்களின் பூர்வீக கிராமம்

Maruthupandiyar Brothers | இன்றைய விருதுநகர் மாவட்டம் முக்குளம் கிராமத்தில் மொக்க பழனியப்ப சேர்வை - ஆனந்தாயி தம்பதியருக்கு மகன்களாக பிறந்தவர்கள் தான் பெரிய மருது மற்றும் சின்ன மருது. பெரிய மருதுவை காட்டிலும் 5 வயது இளையவர் சின்ன மருது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Sivaganga

மருதுபாண்டியர்கள் பிறந்த நாள் (அக். 24) மற்றும் குரு பூஜை (அக் 27), அனுசரிக்கப்படுவதையொட்டி, தலைவர்கள் பலர் சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மருதுபாண்டியர்களின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்குளத்தில் மருதுபாண்டியர்களின் நினைவுச்சின்னங்கள் அழிந்து வரும் அவலநிலை உள்ளது.

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள்:

இன்றைய விருதுநகர் மாவட்டம் முக்குளம் கிராமத்தில் மொக்க பழனியப்ப சேர்வை - ஆனந்தாயி தம்பதியருக்கு மகன்களாக பிறந்தவர்கள் தான் பெரிய மருது மற்றும் சின்ன மருது. பெரிய மருதுவை காட்டிலும் 5 வயது இளையவர் சின்ன மருது.

மருதுபாண்டியர்

சிவகங்கை சீமையின் ராஜா முத்து வடுகநாதரின் படையில் சேர்ந்து முக்கிய பொறுப்புகளை வகித்தனர். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் முத்துவடுகநாதர் இறந்துவிட சிவகங்கை ஆங்கிலேயர் வசம் சென்றது. ராணி வேலு நாச்சியார் மருதுபாண்டியர்களின் உதவியோடு தான் சிவகங்கையை மீட்டெடுத்து ஆட்சி செய்தார்.

மேலும் படிக்க:  கல்வி, வியாபாரத்தில் முன்னேற... வழிபட வேண்டிய திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்!

மருது பாண்டியர்கள் தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டதால் ஆங்கிலேயர்கள் காளையார் கோவில் மீது போர் தொடுத்தனர். மருதுபாண்டியரோடு நேரில் போரிட்டு வெல்ல முடியாத பிரிட்டிஷ் "நீங்கள் சரணடையவில்லை என்றால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்த்தெறிவோம் " என்றதால், தாங்கள் கட்டிய கோவிலை  காப்பாற்றுவதற்காக தங்களின் உயிரினை துச்சமென கருதி மருது சகோதரர்கள் சரணடைந்தனர்.

சரணடைந்த மருதுபாண்டியர்களையும், அவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள், வாரிசுகளை ஆங்கிலேயர்கள் அக் 24-ல் தூக்கிலிட்டு கொலை செய்தனர். இப்படி வெள்ளையர்களுக்கு தலை வலியாய் இருந்த மருதுபாண்டியர் தான் சிவகங்கை மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கின்றனர். ஆனால் அவர்கள் பிறந்ததோ இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமம் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரியதாகும்.

முக்குளம் கிராமத்தில் மருது பாண்டியர் பிறந்த வீடு இருந்த இடம்

மேலும் படிக்க:  சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

சொந்த ஊரின் நிலை:

அத்தகைய மருது சகோதரர்கள்  பிறந்த முக்குளத்தில் உள்ள வீடு முற்றிலும் இடிந்துவிட்டது. இன்று அந்த முக்குளம் கிராமத்தில் இடிந்த சுவடுகள் மட்டுமே எச்சமாக காணப்படுகின்றன. ஆரம்ப கட்டத்தில் அந்த வீட்டில் தான் மருது பாண்டியர்கள் தெய்வமாக வழிபட்ட தீ பாய்ந்த அம்மன் கோயில் இருந்தது. ஆனால் அந்த வீடு போதிய பராமரிப்பு இன்றி இடிந்து விட்டதால், தற்போது அருகில் சிறிய கோவில் எழுப்பி தீ பாய்ந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:  மருது பாண்டியர்கள் குல தெய்வமாக வழிபட்டுவந்த தீ பாய்ந்த அம்மன் கோயில் பற்றி தெரியுமா?

மருது பாண்டியர்கள் பூர்வீக இடத்தில் ஒரு மணிமண்டபம் கட்டலாம் என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் இடையில் நிறுத்தப்பட்டு காணப்படுகிறது. இது தவிர மருது பாண்டியர்கள் கட்டிய கோவில்கள் மற்றும் வழிப்போக்கர் மண்டபங்கள் பல சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படுகின்றன. அவற்றின் நிலையும் இதே தான்.

வழிப்போக்கர் மண்டபம்

இன்றும் இந்த கிராம பகுதிகளில் மருது பாண்டியர்களின் சொத்துக்கள் காணப்படுவதாகவும் அவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசாங்கம் தான் இதை கண்டு கொள்ளவில்லை என்றால் மருது பாண்டியர்கள் பெயரை சொல்லி குலப் பெருமை மட்டும் பேசி வருபவர்கள் இதையும் காக்க முன்வந்து இருக்கலாம். அவர்களில் பெரும்பாலானோருக்கு மருது பாண்டியர்கள் சொந்த ஊரே இது தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் அவற்றையும் காண முடியாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதெல்லாம் யாருடைய தவறு வரலாற்றை சரியாக சொல்லி தராத முன்னோர் தவறா? தெரிந்து கொள்ளாத நம் தவறா? நினைவு சின்னங்களை பராமரிக்காத அரசின் தவறா?? என்று தெரியவில்லை.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar