ஹோம் /விருதுநகர் /

"இப்படி ரோடு இருந்தா எப்படி போறது" குண்டும் குழியுமான சாலையால் விருதுநகர் மக்கள் அவதி!

"இப்படி ரோடு இருந்தா எப்படி போறது" குண்டும் குழியுமான சாலையால் விருதுநகர் மக்கள் அவதி!

X
குண்டு

குண்டு குழியுமான சாலை

Virudhunagar | விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே க்ராஸ்ஸிங் சாலைகள் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே க்ராஸ்ஸிங் சாலைகள் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் இரயில் பாதை செல்வதால் இங்கு ஒரு இரயில்வே க்ராஸிங் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருப்போர் இங்குள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இந்தக்ராஸிங் வழியாக நகருக்குள் செல்லும்போது அவதி பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை இருந்த போதிலும் மக்கள் பெரும்பாலும் உள்ளூர் பயன்பாட்டிற்காக இந்த சாலையே பயன்படுத்தி வருவதாகவும், இந்த நிலையில் சாலை இப்படி சேதமடைந்து காணப்படுவதால் பகல் நேரத்திலே இதை கடந்து செல்ல சிரமமாக உள்ளதாகவும், இரவு நேரத்தில் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகர் பகுதி இரண்டையும் இணைக்கும் முக்கிய உள்ளூர் சாலையாக இருந்த போதிலும், இந்த சாலை நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனை விரைந்து புணரமைப்பு செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Road Safety, Virudhunagar