ஹோம் /விருதுநகர் /

அருப்புக்கோட்டை அருகே சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

அருப்புக்கோட்டை அருகே சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

X
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை

Virudhunagar District News : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் சேதமடைந்து காணப்படும் சாலைகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ளது கோபாலபுரம் எனும் கிராமம். இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது பாலவநத்தம் கிராமம். இவ்விரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் சாலை ஒன்று உள்ளது.

அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையை விட இந்த வழியாக சென்றால் எளிதில் விருதுநகர் சென்றுவிடலாம் என்பதால் கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டங்குடி, பாலையம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த சாலையானது கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.தற்போது சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்வோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதையும் படிங்க : விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

மேலும் இந்த சாலையின் இருபுறமும் ஏக்கர் கணக்கில் விவசாயம் மேற்கொண்டு வருவதால், விவசாயிகளும் தங்களின் கருவிகள் மற்றும் விளைபொருட்களை இந்த சாலை வழியாக தான் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சாலையை விரைந்து சீரமைத்து தர கோரிக்கை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar