ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் | ரயில்வே சுரங்கப் பாதையில் நீருற்று: மீண்டும் மீண்டும் தேங்கும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் | ரயில்வே சுரங்கப் பாதையில் நீருற்று: மீண்டும் மீண்டும் தேங்கும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி

X
தண்ணீர்

தண்ணீர் தேங்கியிருக்கும் சுரங்கப் பாதை

Virudhunagar | விருதுநகர் அருகே உள்ள இரயில்வே சுரங்க பாதையில் நீரூற்றில் இருந்து நீர் வெளியேறி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அருகே உள்ள இரயில்வே சுரங்க பாதையில் நீரூற்றில் இருந்து நீர் வெளியேறி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருந்து விருதுநகர் சாத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பாதையில் இரயில் பாதை இருப்பதால் இப்பாதையை எளிதாக கடக்க ஏதுவாக இங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி வரும் நிலையில், தற்போது மழைக்காலம் முடிந்த பின்னரும் நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ரயில்வே நிர்வாகம் சார்பில், தேங்கியிருக்கும் நீரை அகற்ற மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி வந்தாலும் சுரங்கப்பாதையில் நீருற்று இருப்பதால் நீரானது ஊறி பாலத்தில் தேங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறை மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றினாலும் தண்ணீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டு வருகின்றனர்.

கேட்டதோ..."புது ரோடு" கிடைத்ததோ "பேண்டேஜ் ".. அல்லல்படும் விருதுநகர் அல்லம்பட்டி பகுதி மக்கள்..

இது குறித்து இரயில்வே கோட்ட அலுவலரை தொடர்பு கொண்ட போது, இது குறித்து மேலிடத்திற்கு தகவல் தந்துள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருவதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் இதனை கடக்க சிரமமாக உள்ளதால் இதற்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar