ஹோம் /விருதுநகர் /

சிவகாசியில் தொடரும் விபத்துகள்- விதியை மீறி பட்டாசு ஆலை நடத்துவோர்க்கு அமைச்சர் எச்சரிக்கை

சிவகாசியில் தொடரும் விபத்துகள்- விதியை மீறி பட்டாசு ஆலை நடத்துவோர்க்கு அமைச்சர் எச்சரிக்கை

X
மாதிரிப்

மாதிரிப் படம்

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாயில்பட்டி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பலியாகி உள்ள நிலையில், விதியை மீறி பட்டாசு ஆலைகள் நடத்துவோர்க்கு அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாயில்பட்டி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பேர் பலியாகி உள்ள நிலையில், விதியை மீறி பட்டாசு ஆலைகள் நடத்துவோர்க்கு அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகாசி தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பேபி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 80 க்கும் அதிகமான தொழிலாளிகள்பணிபுரிந்து வரும் சுழலில் கடந்த 19.1.2023 அன்று மாலை 3 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடந்த வெடி விபத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் ஆலையின் எட்டு அறைகள் இடிந்து தரை மட்டமாயின.

இரண்டு சம்பவம்:

இதே போல அதே நாளில் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாகி இருப்பது சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் ரீயூனியன்.. விருதுநகர் குல்லூர் சந்தை கிராம பள்ளியில் நெகிழ்ச்சி..

விதிமீறலே காரணம்:

நடந்த விபத்திற்கு பட்டாசு ஆலைகள் முறையாக பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இருப்பதே காரணம் என்று கூறப்படும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசுகளை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar