ஹோம் /விருதுநகர் /

நீட் நுழைவு தேர்வு பயிற்சி புத்தகங்களை விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் ANT அறக்கட்டளை

நீட் நுழைவு தேர்வு பயிற்சி புத்தகங்களை விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் ANT அறக்கட்டளை

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar | விருதுநகர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்குதல் மற்றும் மருத்துவத்துறை உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்குதல் மற்றும் மருத்துவத்துறை உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

ANT அறக்கட்டளை எனும் சமூக தொண்டு நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்விற்க்கு தயார்படுத்த அவர்களுக்கு நீட் பயிற்சி புத்தகங்களை விநியோகித்து வருகிறது.

அந்த வகையில் நீட் தேர்விற்கு தயாராவதற்கான பயிற்சி புத்தகங்கள் விருதுநகர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் மருத்துவ உயர்கல்வி பெற முயற்சிப்போருக்கு வழங்கப்பட்டது.

நேற்று (12.10.2022) மதியம் 3.00 மணி முதல் 4.30 மணி வரை விருதுநகர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "மருத்துவ கல்லூரிக்கு நான்" என்ற நிகழ்ச்சியில் நீட் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : கள்ளக்காதலியை செங்கல்சூளையில் வைத்து அடித்துக்கொன்ற நபர் கைது- விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

ANT அறக்கட்டளையின் தலைவரும், திருவனந்தபுரம் டாக்டர் சாமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்து மேலாண்மை கல்லூரி முதல்வருமான பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர் 'மருத்துவத்துறை வல்லுனராகும் கனவினை நனவாக' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நீட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. ANT அறக்கட்டளையின் பொருளாளர் தி.திருவேங்கடராமானுஜம் மற்றும் செந்திகுமார நாடார் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் பேரா.லாரன்ஸ் ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர்.

விருதுநகர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருட்தந்தை. அருள்ராயன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பள்ளியின் தலைமைஆசிரியை பொ.பாக்கியராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதையும் படிங்க : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

பேரா.டாக்டர்.தி.ஜெயராஜசேகர், (முதல்வர், மருத்துவ மேலாண்மை கல்லூரி, டாக்டர் சாமர்வேல் மெமோரியல் சி எஸ்ஐ மருத்துவ கல்லூரி, திருவனந்தபுரம்), அவர்தம் சிறப்புரையில் மருத்துவமனையின் 5 பிரிவுகளை (மருத்துவ, செவிலியம், இணை மருத்துவ, துணை மற்றும் நிர்வாக சேவைகள்) பட்டியலிட்டு, சுகாதாரத்துறையில் மனிதவளத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார்.

மருத்துவத்துறை, செவிலியம், இணை மருத்துவ அறிவியல், மருத்துவ மேலாண்மை மற்றும் மருத்துவ பொறியியல் என பிரிவுகளை கொண்ட சுகாதார துறையில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.

பள்ளியின் ஆசிரியை ந.சிவதேவி நன்றியுரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் 75க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். ANT அறக்கட்டளையின் செயலாளர் பாண்டிச்செல்வி, ANT அறக்கட்டளையினை சார்ந்த அகிலன், நிவேதா, விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர் கோ.ஜெயக்குமார் மற்றும் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் பங்கேற்ற மாணவர்கள் இந்த நிகழ்ச்சி மிக பயனுள்ளதாக இருந்தாகவும், மருத்துவ கனவை நிறைவேற்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar