முகப்பு /விருதுநகர் /

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்...

சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்...

X
ஆன்லைன்

ஆன்லைன் ரம்மி

Virudhunagar News | சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மாதர் சங்கத்தினர் போராட்டம்

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அருகே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரியும், சிலிண்டர் விலையை குறைக்க கோரியும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் கடந்த மார்ச் 20ம் தேதியன்று பாண்டியன் நகர் பகுதியில், மாலை 6 மணியளவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர்‌.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விருதுநகர் மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருளை தடை செய்ய வேண்டும், சிலிண்டர் விலையை குறைத்து மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை குறிக்கும் விதமாக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி சாலையில் வைத்திருந்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Virudunagar