ஹோம் /விருதுநகர் /

மருது பாண்டியர்கள் குல தெய்வமாக வழிபட்டுவந்த தீ பாய்ந்த அம்மன் கோயில் பற்றி தெரியுமா?

மருது பாண்டியர்கள் குல தெய்வமாக வழிபட்டுவந்த தீ பாய்ந்த அம்மன் கோயில் பற்றி தெரியுமா?

மருது

மருது பாண்டியர்கள்

Sivagangai King Maruthu Brothers | மருது சகோதரர்கள் குல தெய்வமாக நினைத்து வழிபட்ட தீ பாய்ந்த அம்மன் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிவகங்கையை ஆண்ட மாமன்னர்கள்  ‘மருது சகோதரர்கள்’ குல தெய்வமாக நினைத்து வழிபட்ட தீ பாய்ந்த அம்மன் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அக்டோபர் 24 மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் என்பதால், மருது பாண்டியர்களின் சொந்த ஊரான முக்குலம் கிராமத்திற்கு சென்றிருந்தோம். இக்கிராமம் இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ளது. மருது பாண்டியர் இந்த ஊரில் தான் பிறந்து பிற்காலத்தில் சிவகங்கை சீமையை ஆட்சி செய்தனர் என்ற ஒரு சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. இந்த ஊரில் இன்றும் மருது பாண்டியர்கள் நினைவாக பல இடங்கள் எச்சமாக காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக மருது பாண்டியர்கள் தெய்வமாக வழிபட்ட தீ பாய்ந்த அம்மன் கோயில் ஒன்று இந்த ஊரில் உள்ளது.

மருது பாண்டியர்கள்

தீ பாய்ந்த அம்மன்:

தீ பாய்ந்த அம்மனுக்கு நிறைய வரலாறுகள் சொல்லப்படுவதுண்டு அந்த வகையில் இந்த ஊரை சேர்ந்த அம்மனுக்கும் தனி கதை உள்ளது.

தீ பாய்ந்த அம்மன்

இந்த அம்மனை மருது பாண்டியர்கள் குல தெய்வமாக நினைத்து வழிபட்டதாக கூறுகிறார் இக்கோவில் பூசாரி. இது குறித்து பேசிய அவர் இந்த பெண் மருது பாண்டியர்கள் வாழ்ந்த காலத்தில் காலத்தில் உடன் கட்டை ஏறியவர் அதிலும் இவர் மாற்று சமூதாயத்தை சேர்ந்தவர் என நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

பொதுவாக அந்த காலத்தில் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உடன்கட்டை ஏறினால் அவர்களை தெய்வமாக வழிபடுவர் ஆனால் இது எப்படி என்று கேட்ட போது, இந்த பெண் வேறு ஊரில் இருந்து இந்த ஊருக்கு வந்து மருது பாண்டியர்கள் சத்திரத்தில் தங்கி இருந்ததாகவும், வந்த இடத்தில் அவர் கணவர் இறந்து விட கணவரை இழந்த பெண்ணின் நிலை கண்டு இறங்கிய பெரிய மருது அவருக்கு சில நிலங்களை தானமாக வழங்க முன்வந்தார்.ஆனால் அப்பெண் அதை ஏற்காமல் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தார். அன்றிலிருந்து அவர்கள் அப்பெண்ணை தெய்வமாக நினைத்து வழிபட்டு வந்தனர் என்று கூறினார்.

தீ பாய்ந்த அம்மன்

கோயிலின் தற்போதைய நிலை:

தொடக்கத்தில் மருதுபாண்டியர்கள் தங்களின் பூர்வீக வீட்டில் அந்த பெண்ணின் ஆடைகளை வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த வீடு முற்றிலும் இடிந்துவிட்டது. அதனால் தற்போது அருகில் சிறிய கோவில் எழுப்பப்பட்டு அதில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மருது பாண்டியர் புகழ் நாடெங்கும் பேசப்படும் நிலையில் அவரின் சொந்த ஊரில் அவர்களின் நினைவாக ஒன்றும் இல்லை. பூர்வீக வீடும் இடிந்து விட்டது. அதனால் கோவில் அருகில் சிறிய மணிமண்டபம் கட்ட முடிவு செய்து அதும் பாதியில் கைவிடப்பட்டது. சொந்த சமூதாயத்தினரே மருதுபாண்டியர் நினைவிடம் அமைக்க முன்வரவில்லை என்றும் அரசாங்கம் அரசாங்கமும் இதை கண்டு கொள்ளவில்லை என கவலை தெரிவிக்கின்றனர் அருகில் வசிக்கும் மக்கள்.

Published by:Arun
First published:

Tags: Local News, Sivagangai, Virudhunagar