முகப்பு /விருதுநகர் /

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் மாரியம்மன் கோவில் கோபுரம்!

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் மாரியம்மன் கோவில் கோபுரம்!

X
மின்னொளியில்

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் மாரியம்மன் கோவில் கோபுரம்

Virudhunagar Mariyamman Kovil | பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில். இந்த கோவிலின் பங்குனி மாத திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மக்கள் வெகுசிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இந்தாண்டு பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கும் நிலையில், அம்மன் கோயில் திடலில் மாரியம்மன் தினம் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தர மக்களும் பக்தி பரவசத்தோடு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், திருவிழாவை முன்னிட்டு ஓங்கி உயர்ந்த மாரியம்மன் கோவில் கோபுரமானது தற்போது வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே மற்ற கோவில்களை விட சற்று வித்தியாசமான கோபுர அமைப்பை கொண்ட பராசக்தி மாரியம்மன் கோவில் கோபுரம் தற்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. தினசரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோபுரத்தை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த கோபுர அலங்காரம் பொங்கல் முடியும் வரை இருக்கும் என்பதால் அது வரை கோபுர தரிசனம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Virudhunagar