ஹோம் /விருதுநகர் /

மார்கழி பிரதோஷம், பவுர்ணமி... சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல முடியுமா... நிலவரம் என்ன?

மார்கழி பிரதோஷம், பவுர்ணமி... சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல முடியுமா... நிலவரம் என்ன?

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Sathuragiri Hills | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலையேறி சென்று சாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களை தெரிந்துகொள்வோம்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலையேறி சென்று சாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களை தெரிந்துகொள்வோம்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருகிறது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில், கரடு முரடான பாதைகளின் வழியே மலையில் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மழைக் காலங்களில் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் வனத்துறையினர், அவ்வப்போது பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிப்பது வழக்கம். இந்நிலையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 4ஆம் தேதி தேதி முதல் 7ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பரவலைத் தடுக்க காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், பக்தர்கள் இரவில் மலை மேலே தங்குவதற்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க

மேலும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் உரிய விதிமுறைகளை பின்பறி சாமி தரிசனம் செய்யலாம்.

First published:

Tags: Local News, Margazhi, Virudhunagar