ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை.. சரண கோஷம் பாடிய ஐயப்ப பக்தர்கள்!

விருதுநகரில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை.. சரண கோஷம் பாடிய ஐயப்ப பக்தர்கள்!

X
விருதுநகரில்

விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை

Virudhunagar | விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷம் பாடி சுவாமியை வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷம் பாடி சுவாமியை வழிபட்டனர்.

விருதுநகரை சேர்ந்த சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை அன்னதான விழாக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜையும், அதையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டு நேற்று மாலை 6 மணியளவில், விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஐயப்ப சுவாமி மண்டல பூஜை அன்னதான விழாக்குழுவினர் சார்பில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடி ஐயப்பனை வழிபட்டனர்.

மண்டல பூஜையை முன்னிட்டு லட்சார்ச்சனை, பஜனை, அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்ற நிலையில், மண்டல பூஜையின் அடுத்த நிகழ்வாக 27.12.22 அன்று அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. அன்னதானம் வழங்கும் நிகழ்வு 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதால், எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் வரும் அன்னதான நிகழ்விலும் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ayyappa Temple, Local News, Sabarimala devotees, Virudhunagar