ஹோம் /விருதுநகர் /

‘முதல்வன்’ பட பாணியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான விருதுநகர் அரசு பள்ளி மாணவன்

‘முதல்வன்’ பட பாணியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான விருதுநகர் அரசு பள்ளி மாணவன்

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar News | விருதுநகர் மாவட்டம் மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளியில் கல்வி மற்றும் மற்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 12ம் வகுப்பு மாணவன் தருண் ஆனந்தை ஒரு நாள் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

மாணவ சமூகத்தினரிடையே தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நோக்கில் விருதுநகர் மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு நாள் தலைமையாசிரியராக +2 மாணவர் ஒருவர் செயல்பட்டார்.

நவம்பர் 14 - குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தில் மாணவர்களை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை அடுத்து, விருதுநகர் மாவட்டம் மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளியில் கல்வி மற்றும் மற்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தருண் ஆனந்தை ஒரு நாள் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்தது.

ஒருநாள் தலைமையாசிரியர்

ஒரு நாள் தலைமையாசிரியர் என்றால் பெயரளவில் இல்லாமல் உண்மையில் தலைமையாசிரியரின் பணி என்ன? அவற்றை எவ்வாறு கையாள்வது என்று கற்று தந்து அதில் முழுமையாகவும் ஈடுபட வைத்துள்ளனர்.

மேலும் படிக்க : வீட்டிலிருந்தபடி ₹15,000 வருமானம்.. 140 வகையான சிறுதானிய கேக், பிஸ்கட் தயாரிப்பில் அசத்தும் பெண்..

அதன் படி காலையில் இறைவழிபாட்டு கூட்டத்தில் பதவியேற்றுக் கொண்ட ஒரு நாள் தலைமையாசிரியர், முதலில் மாணவர்களை சந்தித்து பேசி பின்னர் ஆசிரியர்களுடன் சந்திப்பும் நிகழ்த்தினார். பின்பு அலுவலக கோப்புகளையும், வருகை பதிவேட்டையும் சரி பார்த்தார். இடைவேளைக்குப் பிறகுஒரு நாள் தலைமையாசிரியர் குழந்தைகள் தின போட்டிகளை பார்வையிட சென்றுவிட்டார். மதியம் பள்ளியில் ரவுண்ட்ஸ் சென்று வந்து பின்னர் மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

ஒரு நாள் தலைமை ஆசிரியரான அரசு பள்ளி மாணவன்

ஆசிரியர்களின் சவால்கள் என்ன?

இதுகுறித்து பேசிய ஒரு நாள் தலைமையாசிரியராக பொறுப்பேற்று செயலாற்றிய மாணவர் தருண், ’பள்ளி நிர்வாக வேலைகள் பற்றியும், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் இதன் மூலம் தெரிந்து கொண்டதாகவும், மேலும் இன்று மாணவர்களிடையே குறைந்து வரும் நிர்வாக மேலாண்மை திறனை வளர்த்தெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.

அரசு அறிவுறுத்தியதோ இன்று ஒரு நாள் மட்டும் தான். ஆனால் நாங்கள் இதோடு நின்றுவிடாமல், இனி வரும் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களையும் இது போன்று ஒரு நாள் தலைமையாசிரியராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜா. மேலும் இதன் மூலம் மாணவர்களை மேலும் நன்றாக படிக்க ஊக்கப்படுத்த இயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar